Lørenskog நகராட்சிக்கான தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் - நவம்பர் 12 இல் இருந்து அமுல்படுத்தப்படும்.

Lørenskog நகராட்சி புதிய தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீர்மானித்துள்ளது, அவை அக்டோபர் 30 அன்று எடுக்கப்பட்ட தீர்மானங்கள் உடன் இணைந்து இயங்கும் .

இந்த நடவடிக்கைகள் Lørenskog நகராட்சியில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் அனைவருக்கும் செல்லுபடியாகும்.

  • கலாச்சாரம் மற்றும் ஓய்வு  நேர நடவடிக்கைகள் நடைபெறும் அனைத்து வளாகங்களும் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. நூலகங்கள் மற்றும் 20 வயதிற்குட்பட்டவர்களுக்கான செயல்பாடுகளை கொண்ட பழங்கள் இதற்கு விதிவிலக்கு. இதன் பொருள் உடற்பயிற்சி மையம், சினிமா மற்றும் சிறுவர்  விளையாட்டு  நிலையம் என்பவை  மூடப்படும். நீச்சல் தடாகங்கள்  வணிக நடவடிக்கைகளுக்கு மூடப்பட்டுள்ளன.
     
  • கடைகள், பேரங்காடிகள் மற்றும் ஏனைய விற்பனை நிலையங்கள் ஆகியவை ஆகக் குறைந்தது 2 மீட்டர் தூரத்தை பேணப்படுவதற்கு அதிகமான அளவு வாடிக்கையாளர்கள் கட்டிடத்திற்குள் இல்லாதவாறு கடைபிடிக்க வேண்டும். தேவைப்பட்டால் இதை பராமரிக்க கண்காணிப்பு ஏற்பாட்டை செய்து கொள்ள வேண்டும்.
     
  • மதுபானம் பரிமாறுதலை தடை செய்யும் வகையில் மது அருந்தல் வியாபார அனுமதி நிறுத்தம். மது பரிமாற்றத்தை தவிர்த்த வண்ணம் உணவகங்கள் திறந்திருக்கலாம்.
     
  • உட்புற நிகழ்வுகள் அனைத்தும் தடை செய்யப்பட்டு உள்ளன, அதில் சில விதிவிலக்குகள்
    • இறுதிச் சடங்குகள் மற்றும் மரணச் சடங்குகள் (அதிகபட்சம் 50 பேர் கலந்து கொள்ளலாம் அத்தோடு ஒரு மீட்டர் தூரம் அவசியம்).
    • பார்வையாளர்கள் இல்லாமல் ஞானஸ்தானம், திருமணங்கள் மற்றும் இது போன்ற சடங்குகள்.
       
  • வளர்ந்தோருக்கான பொது விளையாட்டு நிகழ்வுகள் இடைநிறுத்தம் செய்யப்படுகிறது. வளர்ந்தோருக்கான ஏனைய ஓய்வு நேர செயற்பாடுகளான வாத்தியக் குழுக்கள் அத்தோடு பாடல் குழுக்கள் என்பவற்றுக்கு இது செல்லுபடியாகும். உட்புறத்தில் பார்வையாளர்கள் இல்லாது உச்சமட்ட விளையாட்டுகளை மேற்கொள்ள முடியும், மேலும் அதிகபட்சம் இதற்கு 200 பார்வையாளர்கள் வெளி அரங்கில் இணையலாம், இருந்த பொழுதும் இவர்களிடையில் ஒரு மீட்டர் தூரம் கடைபிடிக்கப்பட வேண்டும்.
     
  • சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டுக்கள் விலத்தலை கொண்டுள்ளது அத்தோடு இவர்கள் தொடர்ந்தும் பயிற்சிகளை நடத்தலாம், ஆனால் பயிற்சி ஏற்பாடு செய்யலாம், ஆனால் எவ்வகையான  போட்டிகளிலும்  பங்கேற்க முடியாது.
     
  • வாடகை சவாரி வாகனங்களிலும் முகக்கவசம் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது.
     
  • உயர்தரப் பாடசாலை மற்றும் வயதுவந்தோர் கல்வியில் தொற்றுநிலை சிவப்பாக மாறி உள்ளது, மேலும் எதிர்வரும் வாரங்களில் பத்தாம் வகுப்பு வரையான பாடசாலைகளில் தொற்றுநிலை சிவப்பாக மாற வாய்ப்புள்ளது.

Klikk for stort bildeஇடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசத்தை உபயோகிக்கவும் அத்தோடு எத்தனை நபர்களை சந்தித்துக்கொள்கிறீர்கள் என்பதை மட்டுப்படுத்தவும். அக்டோபர் 30 அன்று தீர்மாணிக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் செல்லுபடியாகும்.

 

  • பொதுசன போக்குவரத்தின் போது முகக்கவசம் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது.
     
  • பொது இடங்களில் (கடைகள், மத மற்றும் ஆன்மீக தலங்களில் மற்றும் கலாச்சார, விளையாட்டு மற்றும் ஓய்வு நேர நடவடிக்கைகளுக்கான இடங்கள் உட்பட) உட்புறங்களில் முகக்கவசம் அணிவது  அவசியம்
     
  • ஒரே மேசையில் சேர்ந்து இருக்காத ஏனைய அனைத்து பட்சங்களிலும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் உணவகங்களின் உட்புறத்தில்  உள்ள பொழுது முகக்கவசம் அணிவது அவசியம்.  
     
  • 10 க்கும் மேற்பட்ட நபர்களுடன் தனியார் சந்திப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது அல்லது அவற்றில் கலந்துகொள்ளவது தடை செய்யப்பட்டுள்ளது.
     
  • வெளி அரங்கில்இடம் பெறும் நிகழ்வுகளுக்கு ஒரு மீட்டர் தூரம் கடைபிடித்து அதிகபட்சம் 200 பேர் கலந்துகொள்ளலாம்.
     
  • நடைமுறையில் முடிந்த வரை வீட்டில் இருந்து தொழில் ஆற்றும் படி விதிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியும் கடமையில் இருந்து விதிவிலக்கு

12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் முகக்கவசம் அணியும் கடமையில் இருந்து விதிவிலக்கை கொண்டுள்ளார்கள். அதே போன்று மருத்துவ காரணங்களால் அல்லது வேறு காரணங்களால் முகக்கவசம் அணிய முடியாத உங்களுக்கும் இது செல்லுபடியாகும்.

இதேபோல், முகக்கவசம் அணிய வேண்டிய கடமை பின்வரும் இடங்களில் (கடைகள், மத மற்றும் ஆன்மீக தலங்கள் மற்றும் கலாச்சார, விளையாட்டு மற்றும் ஓய்வு நேர நடவடிக்கைகளுக்கான கட்டிடங்கள் உட்பட) உள்ள ஊழியர்களுக்கு, அவர்களால் ஒரு மீட்டர் இடைவெளியை காக்க முடியாவிட்டால் மட்டுமே செல்லுபடியாகும். தகுந்த தொற்றுத் தடை ஏற்பாடுகளாக உதாரணமாக தடுப்பு சுவர்கள், முழு முக உறைகள் மற்றும் தொடர்பில் உள்ள வாடிக்கையாளர்கள் உடனான இடைவெளியும் நன்றாக இருக்கும் தருணத்தில் ​​ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை.