கொரோனா தொற்று பரிசோதனை - koronatest tamil

கொரோனா தொற்று பரிசோதனைக்கு நீங்கள் ஓர் நேரத்தை பதிவு செய்ய விரும்பினால் அதை நீங்கள் கணணி ஊடாக செய்து கொள்ளலாம். இவ்வாறு கணணி ஊடாக இவ்வாறு இதை செய்துகொள்வதாயின் உங்களது வதிவிட முகவரி Lørenskog இல் பதியப்பட்டு இருப்பதோடு உங்களிடம் BankID அல்லது கைத்தொலைபேசியில் BankID இருக்க வேண்டும். 

கணணி ஊடாக நேர ஒதுக்கீடு செய்யும் வாய்ப்பைக் கொண்ட அனைவரும் இதை கணணி ஊடாக செய்வதை நாம் விரும்புகிறோம். ஒரு நேர ஒதுக்கீடை நீங்கள் உங்களுக்காக, உங்கள் பிள்ளைகளுக்காக அல்லது ஏனையவர்களுக்காக செய்துகொள்ளலாம். நீங்கள் நேர ஒதுக்கீட்டை பதிவு செய்பவர்களின் முழுமையான பிறந்த திகதி கொண்ட பதிவிலக்கம் (11 இலக்கங்கள்) அல்லது D-nummer என்பவற்றை கொண்டிருப்பது முக்கியம். 

 

கணணி ஊடாக நேர ஒதுக்கீடு செய்யும் ஏற்பாட்டை இங்கே காணலாம். 

 

உங்களிடம் BankID இல்லை அல்லது நீங்கள் Lørenskog இல் வசிக்கவில்லை என்றால் நேரத்தை ஒதுக்கீடு செய்வதற்கு கொரோனா தொற்று விடய தொலைபேசியை  67 49 50 27 என்ற இலக்கத்தில் அழைக்கவும். இது திங்களில் இருந்து சனிக்கிழமை வரை மணி 08.30-21:30 இக்கும் அத்தோடு ஞாயிற்றுக்கிழமைகளில் 08:30-21:30 மணிக்கும் திறந்திருக்கும். 

 

நீங்கள் இணையதளத்தின் ஊடாக நேரத்தை பதிவு செய்யும் பொழுது  கொரோனா தொற்று விடய தொலைபேசியை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. 

Personer som blir testet for korona - Klikk for stort bildeஓர் கொரோனா பரிசோதனை இவ்வாறு நடத்தப்படுகிறது Jonas Ruud / Lørenskog kommune  

நீங்கள் கொரோனா வைரஸ் உங்களுக்கு தொற்றி இருக்கலாம் என்ற ஆபத்தை இருக்குமாயின் நீங்கள் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம். சுவாச தொகுதியில் நோய் தொற்றின் அறிகுறிகளைக் கொண்ட அனைவரும் கொரோனா நோயிக்கான பரிசோதனையை மேற்கொள்வது அவசியம். 

 

Lørenskog இல் உள்ள பரிசோதனை மையம் Skårer தேவாலயத்திற்கு அடுத்ததாக Løkenåsveien 29 இல் அமைந்துள்ளது. பரிசோதனை மையத்திற்கு பயணிப்பதற்கு உங்களிடம் வாய்ப்பு இல்லை என்றால் உங்களது வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்யுமாறு நீங்கள் எம்மிடம் வேண்டிக்கொள்ளலாம். 

 

தொற்றின் தடமறிதல் 

 

உங்களுக்கு கொரோனா தொற்றி இருக்கலாம் என்பதற்கான வாய்ப்பு இருக்கும் தருணத்தில் Lørenskog நகர சபையின் தொற்று தடம் அறியும் கண்காணிப்புக் குழு உங்கள் உடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும். அவர்கள் பின்வரும் இலக்கத்தில் இருந்து உங்களை தொடர்பு கொள்வார்கள்: 40 40 98 38 இந்த இலக்கத்தால் அழைக்கப்பட்டு அதை எடுப்பதற்கு நீங்கள் தவறினால் நீங்கள் அதிவிரைவில் இவ்விலக்கத்துடன் மீள அழைத்து எம்முடன் தொடர்பு கொள்ள வேண்டும்!  நாம் அழைப்பவர்கள் அனைவர் உடனும் நாம் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியம்.