Lørenskog நகர சபையில் கொரோனா தடுப்பூசி பற்றிய தகவல் - vaksine tamil

Lørenskog இல் வசிப்பவர்களுக்கு

கொரோனாக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை Lørenskog நகரசபை ஆரம்பித்து உள்ளது. கொரோனா ஓர் தொற்று நோய் அத்தோடு இயன்ற அளவு அதிகப்படியானோர் இத்தடுப்பு ஊசியை எடுக்க வேண்டும் என தேசிய சுகாதார அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர். தடுப்பூசி போடுவதன் மூலம் நீங்கள் நோய்வாய்படுவதை தவிர்க்கிறீர்கள். தடுப்பூசி இலவசமாவதோடு சுய ஆர்வ ரீதியில் வழங்கப்படும்.

நாம் கொரோனா தடுப்பு ஊசிகளை வாரம் தோறும் நோர்வே பொது சுகாதார இலாகாவிடம் இருந்து பெறுகிறோம்.

 

தடுப்பூசி போடுவதற்கான நேரம்

இந்த வெவ்வேறு குழுக்களை நாம் அணுகும்போது நாம் குடிமக்களுடன் தொடர்பு கொள்வோம். நீங்கள் Lørenskog இல் முகவரியை பதிவு செய்து இருந்தால் உங்களது முறை வரும் பொழுது நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம். உங்களுக்கு என பதிவு செய்யப்பட்டு உள்ள தொலைபேசி எண்ணுக்கு ஓர் குறுந்தகவலை (SMS) பெறுவீர்கள். அந்த  குறுந்தகவலை (SMS) இல் உள்ள இணைய இணைப்பை அழுத்தி தடுப்பூசி பெறுவதற்கான ஓர் நேரத்தை பதிவு செய்யவும். நேரத்தை பதிவு செய்யும் விடயமாக உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் தொலைபேசி 67 49 50 37 இல் (வார நாட்கள் 10.00 - 15.00) எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

 

தடுப்பு ஊசிக்கு பதிவு செய்யப்பட்ட நேரத்திற்கு வரும் பொழுது

பதிவு செய்யப்பட்ட நேரத்திற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பு தடுப்பு இடப்படும் மையத்திற்கு வரவும். மூச்சுக் கவசத்தை அணியவும் அத்தோடு அங்கு வந்த உடன் வரவேற்பு மையத்தில் வருகையை அறிவிக்கவும். உங்களது மேல் கையை எளிதாக அடையக்கூடிய வகையில் ஆடை ஒன்றை அணிந்து வரவும். உங்களது சுவாசத் தொகுதியில் சுகயீன அறிகுறிகள் தென்பட்டால் அல்லது நீங்கள் உடல் நலம் சற்று குன்றி இருப்பது போல் உணர்ந்து கொண்டால், அறிகுறிகள் குறைந்த அளவில் இருந்தாலும் கூட பதிவு செய்யப்பட்ட நேரத்தை ஒத்தி வைக்கவும். புதிய நேரத்தை ஒதுக்கீடு செய்வதற்கு தொலைபேசி இலக்கம் 67 49 50 37 இல் தொடர்பு கொள்ளவும்.

 

தடுப்பு ஊசியை நான் எங்கு பெறுவது?

Metro அங்காடியின் இரண்டாவது மாடியில் Lørenskog hus இக்கு பின் பகுதியில் உள்ள Metro இன் (முன்னாள் MAXI கட்டிடமாக இருந்த) பாகத்தில் Lørenskog நகர சபை ஓர் தடுப்பு ஊசிக்கான மையத்தை பிரத்தியோகமாக நிறுவி உள்ளது. இத் தடுப்பூசிமையம் முன்னர்  G-Sport இருந்த அதே தலத்தில் அமைந்து உள்ளது. இதன் முகவரி Kulturhusgata 2 ஆகும்.

 

நான் எவ்வாறு அங்கு செல்வது

நீங்கள் நிலமட்டத்திற்கு கீழ் உள்ள வாகனத் தரிப்பின் அடித்தளத்தில் வாகனத்தை தரித்துக்கொண்டால் அங்கு இருந்து Metro Storhandel என அடையாளம் இடப்பட்ட பாதையை உபயோகிக்கவும். நீங்கள் 3 மணி நேரம் வரை வாகனத்தை அங்கு தரிக்கலாம். அங்காடியின் நுழைவாயிலுக்கு வெளியே ஓர் குறுகிய நேரம் வரை வாகனத்தை தரித்துக்கொள்ளலாம். இதற்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பிடத்தின் பெயர் Knatten ஆகும். அங்காடிக்கு உள் ஆல் தூக்குகள் உண்டு.

 

உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர் அவசியமா?

தடுப்பூசி பெறும்பொழுது ஓர் மொழிபெயர்ப்பாளரை உபயோகிப்பதற்கு நீங்கள் உரிமை கொண்டு உள்ளீர்கள். மொழி பெயர்ப்பாளர் இலவசமாகும். உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர் அவசியம் எனில் நீங்கள் தடுப்பு ஊசிக்கான நேரத்தை முன்பதிவு செய்யும் பொழுது koronavaksine@lorenskog.kommune.no என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புதல் ஊடாக அல்லது தொலைபேசி எண் 67 49 50 37 (வாரநாட்கள் 10:00 – 15:00) இக்கு அழைத்து இதை எமக்கு தெரியப்படுத்துங்கள்.  மொழி பெயர்ப்பாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இருவருக்கும் தகவல் பாதுகாக்கும் கடமை உண்டு.

 

கொரோனா தடுப்பூசி பற்றிய விபரங்கள்

www.lorenskog.kommune.no/koronavaksine என்ற இணைய தளத்தில் Lørenskog இல் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தொடர்பான தகவல்கள் அனைத்தையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். தற்சமயத்தில் எந்த குழுவிற்கு தடுப்பு வழங்கப்படுகிறது என்ற விபரத்தையும் இங்கே காணலாம்.

 

இத் தடுப்பூசி பாதுகாப்பானதா?

தடுப்பு ஊசிகள் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் இவை ஓர் விரிவான பரிசோதனை திட்டத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. கொரோனா தடுப்பு ஊசியால் பாரதூரமான பக்கவிளைவுகள் எதுவும் கண்டறியப்பட இல்லை. இது ஆபத்தான எந்த பொருட்களையும் உள்ளடக்க இல்லை அத்தோடு அனைத்து மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

 

இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருந்திருக்கும் என நாம் நம்புகிறோம். கேள்விகள் ஏதாவது உங்களுக்கு இருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளலாம். தடுப்பு ஊசியை பெற்றுக்கொள்வதற்கு வரவேற்கிறோம்.

அன்புடன், Lørenskog நகரசபை